அங்கோர் வாட், கம்போடியா.
ரம்யமான தென்றல் அங்கிருந்த காட்டில் அசந்து தூங்கிக்கொண்டிருந்த குயில்களை எழுப்பிய வண்ணம் இருந்தது.
கேஹ்மர் ராஜ்யத்தின் கம்பீரத்தை பிரதிபலித்த அந்த கோவிலுக்கு இன்னும் சில வினாடிகளில் மக்கள் வர ஆரம்பித்து விடுவார்கள். இறுக்கத்துடன் காவலாளி ஆங் ஜீ, கோவிலுக்கு எதிரே நீண்டிருந்த கற்சாலையை பார்த்தபடி இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான்.
பாதி இருட்டில் தென்பட்ட ஒரு உருவம் ஒரு பெரிய தடியுடன், கிடு கிடு என்று ஓட்டமும் நடையுமாக கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அந்த உருவத்தைக்கண்டதுமே ஆங் ஜீயின் கண்களில் ஒரு விடியல் தெரிந்தது.
அவர் வரும் திசை நோக்கி தானும் வேகமாக நடந்தான்.